மகாவிஷ்ணு இத்தலத்து இறைவனை வழிபட்டு 'பாஞ்ஜசன்யம்' என்னும் சங்கைப் பெற்றதால் இத்தலம் 'திருத்தலைச்சங்காடு' என்று வழங்கப்படுகிறது.
மூலவர் 'சங்கருணாதேஸ்வரர்', 'சங்காரண்யேஸ்வரர்' என்னும் திருநாமங்களுடன், அழகிய லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். அம்பாள் 'சௌந்தர்ய நாயகி' என்னும் திருநாமத்துடன் தரிசனம் தருகின்றாள்.
இது கோச்செங்கட்சோழன் கட்டிய மாடக்கோயில்.
ஊரின் மறுபக்கத்தில் மங்களாசாசனம் பெற்ற 'தலைச்சங்க நாண்மதியம்' என்னும் திவ்யதேசம் உள்ளது.
திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 7.30 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
|